News

GMOA நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ..

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தத்தினால் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நியாயமான பதில் கிடைக்காவிட்டால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுகாதார சேவையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் ஆழமாக சிந்திக்க வேண்டும் எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button