News
களுத்துறையில் ரயிலுடன் மோதி பலத்த சேதமடைந்த முச்சக்கரவண்டி – பாய்ந்து தப்பிய சாரதி

களுத்துறை, வஸ்கடுவ, கோன்கஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள ரயில் மார்க்கத்தில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
கவனக்குறைவாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மருதானையிலிருந்து களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி, முச்சக்கரவண்டியிலிருந்து வெளியே குதித்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

