News
தலைமறைவாகியுள்ள தேஷபந்து தென்னக்கோனின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள தேஷபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

