நாடளாவிய ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் தொடர்ந்தும் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னணியில்..

தொடர்ந்தும் தேசிய மட்ட போட்டிகளில் வட மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னணியில்…….
நடைபெற்று முடிந்த தேசிய மட்ட தமிழ் மொழித்தினம், ஆங்கில தினம், போன்றவற்றில் அதிக இடங்களைப் பெற்றுக் கொண்ட அ/கலாவெவ மு.ம.கல்லூரி மாணவர்கள் தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியிலும் சாதித்துக் காட்டி உள்ளனர் .
இம்முறை நடைபெற்று முடிந்த தேசியமட்டசமூக விஞ்ஞானப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் M.H.F.ரஹா , முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் M.F.மரியம்,PMF மிஸ்னா ஆகிய மாணவிகள் 5ம்,6ம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியிலும் மாணவி,M.H.F. ரஹா முதலாம் இடத்தைப் பெற்றி ருந்தார் என்பது பாராட்டுத்தக்க விடயமாகும். ஒரே வருடத்தில் இரண்டு தேசிய மட்ட போட்டி நிகழ்வுகளில் முதலிடம் பெற்ற இம்மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது பாடசாலைச்சமூகம்.
மேலும் அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் M.F.மரியம் இரண்டாம் இடத்தையும் எம் M.R.Z.ரஷ்மா நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக அகில இலங்கை ஆங்கிலத்தினப் போட்டியில் M.R.சஸ்ரா, M.R.Z.பதீனா ஆகியமாணவிகளும் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.

