News

முஸ்லிம் சேவையின் நேரம் குறைப்பு

கவலை வெளியிட்டு அமைச்சருக்கு முஸ்லிம் மீடியா போரம் கடிதம்

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளமை மிகவும் கவ­லை­ய­ளிப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜய­திஸ்­ஸ­வுக்கு கடிதம் மூலம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது­கு­றித்து மீடி­யா ­போரம் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு அதிக வரு­மானம் ஈட்­டிக்­கொ­டுக்­கின்ற ஒரு சேவை­யாக முஸ்லிம் சேவை கடந்த பல வரு­டங்­க­ளாக காணப்­பட்டு வரு­கின்­றது.

இலங்கை வாழ் முஸ்லிம் மக்­க­ளினால் அதி­க­மாக கேட்­கப்­ப­டு­கின்ற வானொலி சேவை­யா­க­வுள்ள இந்த சேவையின் நேரத்­தினை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை பல்­வேறு தட­வைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில், இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் தற்­போ­தைய நிர்­வா­கத்­தி­னாலும் முஸ்லிம் சேவையின் நேரத்­தினை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்கைள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சேவைக்கு அதிக நேரத்­தினை ஒதுக்க வேண்­டிய நிலையில், அதன் நேரத்­தினை குறைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ள விடயம் மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது.

புனித ரமழான் மாதத்தில் இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சிகள் ஒலி­ப­ரப்­பப்­ப­டு­வது வழ­மை­யாகும். எனினும், திடீ­ரென கடந்த 4ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இரவு 7 மணி முதல் 20 நிமி­டங்கள் இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் தமிழ் செய்தி ஒலி­ப­ரப்­பப்பட்­டுள்­ளது.

இதனால், 60 நிமி­டங்­களைக் கொண்ட முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சிகள் 40 நிமி­டங்கள் மாத்­தி­ரமே ஒலி­ப­ரப்­ப­ப்பட்­டுள்­ளன. புனித ரழமான் மாதத்தில் 6 மணி முதல் 6.30 மணி வரை இப்தார் விசேட நிகழ்ச்சி அனைத்து தொலைக்­காட்­சி­க­ளிலும், வானொ­லி­க­ளிலும் ஒலி­ப­ரப்­பப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

இதனால், இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் தமிழ் செய்தி பி.ப 5.30 மணிக்கு ஒலி­ப­ரப்­பப்­படும். இவ்­வா­றான நிலையில் திடீ­ரொன 7 மணிக்கு இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் தமிழ் செய்தியை ஒலி­ப­ரப்பி முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சி­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் உட­ன­டி­யாக கவனம் செலுத்தி உரிய நட­வ­டிக்­கை­க­களை முன்­னெ­டுக்­கு­மாறு உங்­க­ளிடம் மிகவும் வின­மாக வேண்­டிக்­கொள்­கின்றோம். அத்­துடன் இந்த விடயம் தொடர்பில் உங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொள்ள நேரம் ஒதுக்கித் தரு­மாறும் கோரிக்கை விடுக்­கின்றோம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த கடி­தத்தின் பிர­திகள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், சுகா­தார மற்றும் ஊடக அமைச்சின் செய­லாளர் டாக்டர் அனில் ஜய­சிங்க, மற்றும் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன தலை­வ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நிஸாம் காரி­யப்பர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டினார்.

அவர் உரை­யாற்­று­கையில், நோன்பு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் இப்தார் நிகழ்ச்­சி­களை சிறப்­பாக நடத்­து­கி­றது. முஸ்லிம் வர்த்­த­கர்கள் பல கோடி பெறு­ம­தி­யான விளம்­ப­ரங்­களை வழங்­கு­கி­றார்கள்.

இது­வரை காலமும் இரவு வேளையில் 1 மணித்­தி­யா­ல­மாக ஒலி­ப­ரப்­பப்­பட்ட இரவு வேளைக்­கான இஸ்­லா­மிய நிகழ்ச்சி நேற்று (நேற்று முன்­தினம்) முதல் 45 நிமி­டங்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இதனை திருத்தம் செய்து கூட்­டுத்­தா­பனம் வழமை போல் 1 மணித்­தி­யா­லத்­துக்கு இஸ்­லா­மிய நிகழ்ச்­சியை ஒலி­ப­ரப்ப நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli

Recent Articles

Back to top button