ஈரான் அணு ஆயுதங்களை ஏந்த தீர்மானம் !

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்திவைப்பது தொடர்பாக இதுவரை நடைமுறையிலிருந்த அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளையும் இரத்து செய்ய அந்நாட்டின் அரசியல் தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) தீர்மானித்துள்ளார்.
அணு ஆயுதங்களை வைத்திருப்பது ஈரானின் இறையாண்மை மிக்க உரிமையாகும் என்றும், அது சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட வேண்டிய விடயமல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அதியுயர் தலைவராக பலரது கவனத்தைப் பெற்றுள்ள மொஜ்தபா கமேனியின் இந்தத் தீர்மானத்துடன், பிராந்திய அரசியல் சூழல் கடும் பதற்றமடைந்துள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக முன்னர் பின்பற்றப்பட்ட மென்மையான போக்கை கைவிட்டு, ஈரான் தற்போது நேரடியாகவே அணுசக்தி வல்லரசாகும் இலக்கை நோக்கி பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“முன்னர் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் கொல்லப்பட்டிருப்பதால், தற்போது அணு குண்டை தயாரிக்கும் தலைவர் களமிறங்கியுள்ளார்” எனும் செய்தி இந்தத் தீர்மானத்தின் மூலம் வெளிப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன”
முன்னர் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் தனது பாதுகாப்பு மூலோபாயத்தை முழுமையாக மாற்றியமைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.



