News
போலி இலக்கத் தகடுகளுடன் இயங்கும் 267 வாகனங்கள் பொலிஸ் CCTV மூலம் அடையாளம் காணப்பட்டன

நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் போலி இலக்கத் தகடுகளுடன் இயங்கும் 267 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிடிரி பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுவது குறித்து தகவல்கள் தெரியவந்தது

