சம்மாந்துறையில் 7 பேரை கடித்து, பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட நாயின் தலை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விசர் நாய்க்கடி – சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் புதன்கிழமை(12) பதிவாகியுள்ளது.
இதற்கமைய உடன் செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்துவிட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளதுடன் அப்பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட நாயின் தலையை மீட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இன்று(13) அப் பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளடன் பொதுமக்கள் விசர் நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
அத்துடன் 3 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகியுள்ளதுடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால் , மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.



