அனைவரதும் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் – அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன், அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்குள் நுழைந்திருப்பதால், அதன் பரிந்துரைகள் மற்றும் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்பட வேண்டியிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தெரிவித்தார்.
அதன்படி வரவு செலவு கட்டுப்பாடுகளின் கீழ் முன்னுரிமைகளை அறிந்துகொண்டு இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன்,
அந்த இக்கட்டான நிலைக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்குப் பெருமளவில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
தொழில்வாண்மையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நல்லதொரு புரிதல் இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி தொழில்வாண்மையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நல்லதொரு புரிதல் இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

