ஈரானின் இன்றைய 56 ஆவது அலைத் தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளை தலைமையகம் மற்றும் ரஃபேல் ஆயுத நிறுவனத்தின் தளங்கள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியது

இஸ்ரேலிய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளை தலைமையகம் மற்றும் ரஃபேல் ஆயுத நிறுவனத்தின் தளங்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தற்போதைய போரின் 56 ஆவது அலைத் தாக்குதல்கள் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை அறிவித்துள்ளது.
இதில் இஸ்ரேலின் பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான அல்-உடெய்ட் விமானத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்த படை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள எர்பில் பகுதியில் தங்கியுள்ள ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களின் நிலைகள் மீது ஈரானின் ட்ரோன் பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ஒபரேசன் எபிக் பியூரி (தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் பரவியுள்ளது.



