News

அம்பாறை மாவட்டத்தில் வெளிக் கிளம்பிய மயில் !


நூருல் ஹுதா உமர்
2025 இல் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில் இன்று (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.


இதில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர், அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஷ்லி முஸ்தபா, கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.காதர், பொருளாளர் கலீல் முஸ்தபா, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் அக்கறைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளருமான எஸ்.எம். சபீஸ், உயர்பீட உறுப்பினரும் இறக்காமம் பிரதேச அமைப்பாளருமான ஏ.எஸ். முனாஸ், உயர்பீட உறுப்பினரும் முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.எல். நெளபர் மெளலவி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சமட் ஹமீட், ஏ.சி.எம். முபீத், கட்சியின் நாவிதன்வெளி பிரதேச முக்கியஸ்தர் மஃறூப், பாராளமன்ற உறுப்பனரன் இறக்காமம் பிரதேச இணைப்பாளர் மீராசாகிபு, இறக்காமம் பிரதேச இளைஞர் அமைப்பாளர் எம்.ஏ.எம். நிப்ரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் சாத்தியம் அதிகம் இருப்பதுடன் காரைதீவு, நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய சபைகளில் ஏனைய கட்சிகளுக்கு சவாலாக அமையும் விதமாக ஆசனங்களை பெரும் வாய்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button