News

‘யுக்திய’ நடவடிக்கையில் போதைப்பொருள்  பெயர் பட்டியலில் சேர்க்காமல் இருக்க நபர் ஒருவரிடம் 1,50,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது.

வத்தளை, மஹாபாகே நீதிமன்றத்திற்கருகில் நபர் ஒருவரிடமிருந்து 1,50,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.



உஸ்வெட்டகெய்யாவை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் தொடர்பான பெயர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கும் குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் இலஞ்சம் பெற்றதாக இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button