News
87-90 களில் JVP செய்த அனைத்து கொலைகளுக்கும் நான் உட்பட ஆயுதம் ஏந்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் !

1987-90 க்கு இடையில் ஜே.வி.பி செய்த அனைத்து கொலைகளுக்கும்,அந்த நேரத்தில் ஆயுதம் ஏந்திய தான் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க கோருகிறார்.
பட்டாலந்தா கமிஷன் அறிக்கை தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள விவாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது சமூக ஊடக கணக்கில் இதைப் பதிவிட்டுள்ளார்.
ஜேவிபியின் 1994 ஜனாதிபதி வேட்பாளராக நந்தன குணதிலக்க போட்டியிட்டார்.பின்னர் அவர் பல கட்சிகளில் சேர்ந்து பாணந்துறை மேயராகவும் பணியாற்றினார்.

