News
இலங்கையர்கள் பாதுகாப்பாகவும் அதிக அவதானத்துடன் இருக்கவும் – இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனஇலங்கை தூதரகம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



