சிகிரியாக் குன்று சுற்றுலா தலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உரிய முதலுதவி இன்றி உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

சிகிரியா குன்றுக் கோட்டையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உரிய முதலுதவி இன்மையால் உயிரிழந்துள்ளதாக இலங்கை spirit சுற்றுலா சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீகிரியாவில் முறையான முதலுதவிச் சேவைகள் இன்மையால் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கச் செயலர் என்.பி. விஜேசிங்க தெரிவித்தார்.
“சீகிரியா டிக்கெட்டின் விலை ரூ. 11,000. வசூலிக்கப்படும் தொகையில் குறைந்தபட்ச முதலுதவி வசதிகளை கூட வழங்க முடியாது என்பது உண்மையிலேயே வெட்கக்கேடானது.
சிகிரியாவில் முதலுதவி வசதிகளை தொடங்க இன்னும் எத்தனை இறப்புகள் தேவை?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்
விஜேசிங்க சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவிக்கையில்; “பொறுப்பும், விசாரணையும் நடத்த வேண்டிய சில உயர் அதிகாரிகள் முகநூலில் கருத்துகளை எழுதிக் கொண்டும், மற்றவர்கள் நாற்காலிகளை சூடு படுத்திக் கொண்டும், பதவிகளுக்காகக் கடைக்குப் போனவர்கள் பதவிகளை பெற்றாபின் பெற்றுக் கொண்டு காணாமல் போய்விட்டார்கள்.”
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சுற்றுலா சேவை வழங்குநர்கள் என்ற வகையில், சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகள் தொடர்பிலான இந்த மிக முக்கியமான கோரிக்கைக்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.



