VIDEO > பாரிய கடன்சுமை காரணமாக சென்ற அரசில் வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட இருந்த மில்கோ நிறுவனத்தின் பாரிய கடனில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான தொகை தற்போது செலுத்தப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியானது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மில்கோ செலுத்த வேண்டிய பாரிய கடனில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தற்போதைய தலைவர் திரு ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்துள்ளார்
முன்னர் மில்கோ நிறுவனம் பெரும் கடனில் சிக்கித் தவித்ததாகவும், அதை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க தயாராகி வந்ததாகவும் அவர் கூறினார்.
இதனால் அதன் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், இந்நிலையில் குறுகிய காலத்திற்குள் மில்கோ வாங்கிய கடனில் 50 சதவீதத்தை செலுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய 500 மில்லியன் ரூபா கடன் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 700 மில்லியன் ரூபாவும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னர் மில்கோ நிறுவனம் 1800 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு மிகைப்பற்று வைத்திருந்ததாகவும் அது கணிசமான தொகையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வீடியோ 👇

