News
கம்பஹா பியகம தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு இன்று (19/03/2025) புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
பியகம தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் உயர்பீட உறுப்பினர் சித்தீக் ஹாஜியார், பியகம தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களான முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் இர்ஷாத், பிரதேச சபை வேட்பாளர்களான, பாயிஸ் அஹமட், முஹம்மது பாஹிம் ஆகியோரும் இதன் போது பிரசன்னம் ஆகி இருந்தனர்.



