News

சுனிதா வில்லியம்ஸ்க்கு நிசாம் காரியப்பர் வாழ்த்து

அர்ச்சுனா எம்.பி. தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.இனியாவது அவர் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் என நிசாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பான முறையில் பூமிக்கு திரும்பியுள்ளார். அவருக்கும் ஏனைய வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ச்சுனா எம்.பி தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்தார்.இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அறிவிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அர்ச்சுனா எம்.பி இனியாவது தனது செயற்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டிவிடக் கூடாது என்றார்.

Recent Articles

Back to top button