News

2005 ம் ஆண்டு தாம் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கும் போது அவர் இன்று செய்துள்ள அளவுக்கு பாவம் செய்திருக்கவில்லை !

2005 ம் ஆண்டு தாம் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கும் போது அவர் இன்று செய்துள்ள அளவுக்கு பாவம் செய்திருக்கவில்லை என ஆளும் தரப்பின் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக குறிப்பிட்டார்.

2005 – 2009 காலப்பகுதியில் தங்களது கட்சி நாட்டை பிளவுபடுத்தும் யுத்துக்கு எதிராக சில தீர்மானங்களை எடுத்தோம்.ஆனால் 2009ம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்‌ஷவின் ஆட்சி முறை தொடர்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மிக விரைவாக எமது உடலில் இருந்து அதை வெளியேற்ற வேண்டி நிலை எமக்கு ஏற்பட்டது.

2005 ம் ஆண்டு நாம் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கும் போது அவர் இன்று செய்துள்ள அளவுக்கு பாவம் செய்திருக்கவில்லை.2009ம் ஆண்டுக்கு பிறகு அல்லது 2010 க்கு பிறகு ராஜபக்‌ஷவோடு எவரும் இணைந்திருந்தால் அவர்கள் தொடர்பில் நாம் தனியாக தேடவேண்டும். அப்படியான ஒருவரே இன்று அந்த மூலையில் இருந்து பேசினார். யார் அவர் 2012 /2013 இல் நில்பலகாயவில் பதவி வகித்தவர்.

சாதாரண தமிழருக்கு 2010 க்கு பின்னர் ராஜபக்‌ஷவின் பின்னால் செல்லமுடியுமா என நான் கேட்கிறேன். பிள்ளையானுக்கும் கருனாவோடும் சென்றவரே அவர்.2013 இல் ராஜபக்‌ஷவோடு சென்ற அவர் 2023 இல் தனிலோடு சென்றவர் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button