News

காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை ; இலங்கை அரசு

காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,

“காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.விரைவில் இப்பகுதியில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் காசா விடயம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடன் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button