தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு

வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தை, மனித தலைமுறையை உருவாக்க பள்ளிப் பாட அமைப்பில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் உட்பட தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு நேற்றைய தினம் சனிக்கிழமை மினுவாங்கொடை நகரசபை நுலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நூலினை பிரபல கணனி தொடர்பிலான நிபுனரும், விரிவுரையாளருமான,ஆசிரியர் எல். எம். ரிஸ்லான் சிங்கள மொழியில் எழுதி இருந்தார்.
மேற்படி நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக களனி பல்கலைக்கழக சமஸ்கிருதம் மற்றும் சர்வதேச சமயத் துறையின் மூத்த பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்தன ஹிமி
அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளரும்,உளவியல் ஆலோசகர் – பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்கார்,மேல் மாகான முன்னாள் முதலமைச்சரும் கல்வி மாநகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ரெஜி ரனதுங்க கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் தலைவர் பிரசன்ன ரணதுங்க,முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,தினமின பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியரும் ஊடக ஆலோசகருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க கொடகும்புர, மூத்த ஊடகவியராளர் கலா பூஷணம், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னால் தமிழ் ஊடக ஆலோசகர். எம்.ஏ.எம். நிலாம் (ஈழுத்து நூன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் எஸ். எல். ரிஸ்லான் பற்றி சில பதிவுகள் :-
24.01.1989 ஆண்டு மினு வான் கொடையில் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியினை கல்லொலுவ லும்பினி மற்றும் நாளந்தா தேசிய பாடசாலை மினுவாங்கொடை (1994 – 2005) ஆகியவற்றிலும் மேற்கொண்டார்.
கம்ப்யூட்டர் தொடர்பிலான ஆரம்ப டிப்ளமோ, கணினி வன்பொருள் டிப்ளமோ பகுதி I,II (2009) கணினி தேசிய உயர் டிப்ளோமா (எச்என்டி ) (2010) லும் நிறைவு செய்திருந்தார்.
Vx டெலிகாமின் தலைமை தகவல் தொழில்நுட்ப அமைப்பின் பிரதான அதிகாரியாகவும்,அப்போதைய மேல்மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவின் தமிழ் ஊடகச் செயலாளரும் (2013) இல் கடமையாற்றி இருந்தார்.
பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் உறுப்பினராக (2010) இலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளராக (2017) இலும்இலங்கை கணினி சங்கத்தின் உறுப்பினர் (2020) இலும் அங்கதத்துவம் வகித்தார்.
முழு தீவுக்கும் சமாதான நீதிவான் (2021) வும், சிவில் சர்வீஸை முடித்தல் (2022) வும்,வெளிநாட்டில் பத்ர் இன்ஸ்டிடியூட் கிராண்ட் கணினி வடிவமைப்பு அதிகாரியாகவும் (2022) சமூக அரசியல் செயல்பாட்டாளராக எஸ். எல். ரிஸ்லான் இருந்துள்ளார்.
தான் கற்ற கல்வியையும் அனுபவத்தையும் கொண்டு கல்வி சமூகத்திற்கான நூல் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற இலக்கில் மேற்படி நூலினை சிங்கள மொழியில் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முனீரா அபூபக்கர்
2025.03.22







