News
விலங்கு கணக்கெடுப்பை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் ; லால்காந்த

விவசாய அமைச்சர் இம்முறை விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை வரும் இருபத்தெட்டாம் தேதி கிடைக்கும் என அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.
இது ஒரு முழுமையான மற்றும் தீர்க்கப்பட்ட அறிக்கை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.மேலும் பல சந்தர்ப்பங்களில் இதே கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.
வனவிலங்குகள் கணக்கெடுப்பின் மூலம் விலங்குகள் மேலாண்மை குறித்து யோசிக்க முடியும் என்றும், அதன் படி மேலதிக விலங்குகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முடிவு செய்யலாம் என்றார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

