ACMC அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் முஸ்லிம் காங்கிரசில் இணைவு..

கே எ ஹமீட்
அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினரும், அமைப்பாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளரும்,தொழிலதிபருமான AK . அமீர் இன்று 27.03.2025(வியாழக்கிழமை) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாரளமன்ற உறுப்பினரும் சட்ட முதுமானியுமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதுடன்,எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான MS. உதுமாலெப்பை MP மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் தேசிய பொருளாலர் றஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான AC.சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ALM.அலியாரும் மற்றும் அமீர் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்.

