News

நாங்கள் பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கவில்லை.

அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் கூறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களிடம் விஞ்ஞாபனத்தை முன்வைத்து தனது அரசாங்கம் அதிகாரத்தை பெற்றதாகவும்,அந்த விஞ்ஞாபனத்திற்குள் தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்போம் எனவும், அதனை விட்டு விலகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் செய்ய முடியாது என மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button