அனுர அரசும் இதற்கு முன் இருந்தவர்கள் போல் செயற்படுகின்றது.

அனுர அரசும் இதற்கு முன் இருந்தவர்கள் போல் செயற்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த சாடியுள்ளார்.
அவரின் முகநூல் பதிவில் ..
“கடந்த 25ம் திகதி பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஸ்தியின் தாய் தந்தையினரை இன்று சந்தித்தேன்.பெயிண்டராக வேலை செய்யும் வயதான தந்தைக்கு என்ன நடப்தென்ற தெளிவு கூட கிடையாது. வெறும் ஸ்டிக்கருக்காக கைதாகி இருக்கின்றார் என்ற தகவலைத் தவிர ஏதும் அவர்களிடம் இல்லை.
ஒருவரை சிறைப்படுத்தும் ஆணையை நீதிபதியே வழங்க முடியும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அல்ல ஆனால் PTA இன் மூலம் பாதுகாப்பு அமைச்சர் அதை செய்கின்றார். அவர் சுயாதீனமாக இருக்க மாட்டார் எனவே பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்குங்கள் என்று போராடிய அனுர கையெழுத்து வைத்த தடுத்து வைக்கும் ஆணையைப் பார்த்து ஆதரவாளர்கள் பெருமை கொள்ளுங்கள். அனுர நீதிபதியானால் நீதிபதிகள் எங்கே செல்வது ? இது ஒரு ஜனநாயக நாடா ?
இதில் உள்ள எந்த விடயங்களுக்கும் எந்த வித ஆதாரங்களும் இல்லை. பொய்யான சந்தேகத்தில் ஒருவர் தண்டனை அனுபவிக்கின்றார்.
பெற்றோர்கள் மிரட்டப்படுகின்றார்கள், 13 வயது தங்கையை விசாரிக்க அழைத்து வரச் சொல்கின்றார்கள், மாலைதீவில் பணிபுரியும் அண்ணனின் வேலையை இல்லாமல் ஆக்குவோம் என மிரட்டி இருக்கின்றார்கள்.
இறுதியாக அனைவருக்கும் ஒன்றைச் சொல்கின்றேன் இந்த அரசும் இதற்கு முன் இருந்தவர்கள் போல் செயற்படுகின்றது நாளை என்னைப் பயங்கரவாதி என்றாலும் காப்பாற்ற முடியாது அனுர தனக்கு ஏற்றது போல் தடுத்து வைப்பார். எனவே அனைவரும் அவதானமாக செயற்படுங்கள்.
ருஸ்தியின் விடுதலை மற்றும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்து செயற்படுவோம். என கூறியுள்ளார்.

