News
சட்டத்தை கையில் எடுத்த பிரதி அமைச்சரின் மாமா ! தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸ் முறைப்பாடு !!

அம்பாறை உகன 24, உதகிரிகம கிராமத்தில் பிரதியமைச்சர் ஒருவரின் உறவினர் உள்ளிட்ட சிலர் தாக்கியதில் பெண் ஒருவரும் மற்றுமொரு நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதியமைச்சர் ஒருவரின் உறவினர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு சொந்தமான நெற்காணியை பிரதி அமைச்சரின் மனைவியின் தந்தை வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முற்பட்ட போது, உஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் அதற்கு உகன பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் நியாயமாக தீர்வு காணவில்லை என தாக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார்.

