தேவையான கோரிக்கையை முன்வைத்தோம் ! கலந்துரையாடலுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது !!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44% வரி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேவையான கோரிக்கையை முன்வைத்திருந்ததால்,கலந்துரையாடலுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இலங்கையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படலாம் என கடந்த வாரத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் நினைத்து வருவதாகவும், அவர்கள் பரிதாபமாக இருப்பதால் காத்துக்கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் தலதா கண்காட்சினை பார்க்க திரு.சஜித் பிரேமதாச அவர்கள் வரிசையில் நிற்க வேண்டும் எனவும் இம்முறை அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

