News

இலங்கை வரலாற்றில் சொன்னதை நிறைவேற்றிய ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

இலங்கை வரலாற்றில் சொன்னதை நிறைவேற்றிய ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு.சில்வா குறிப்பிடுகின்றார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியபோது, பொருளாதாரம் பூஜ்ஜியத்திற்குச் சென்றிருந்ததாகவும், மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்ததாவும் அவர் கூறினார்.

கடனை அடைக்க முடியாத, மூன்று வேளையும் சாப்பிட முடியாத ஒரு நாட்டை தனது அரசாங்கம் பெற்றதாக கூறிய அவர்,

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button