News

வங்காளதேச ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்குலக நாடு ஒன்றின் கை ?

‘வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.

14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.

மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்’ என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை.தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

Recent Articles

Back to top button