News

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை

பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தானும் அதிரடியான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு.

 
அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு

இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் முழுமையாக தடை விதித்துள்ளது பாகிஸ்தான்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா வெளியிட்ட அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் பாயும் நதிநீரை இந்தியா தடுத்தால் அதனை போர் நடவடிக்கையாக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாக்கிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recent Articles

Back to top button