நாட்டில் தற்போது T56 ரக துப்பாக்கி யுகம் ஒன்று உருவாகியுள்ளது – வீடு புகுந்து கொல்கின்றனர் – மக்கள் பயத்துடனே வாழ்கின்றனர் ; சஜித்

இலங்கையில் தற்போது T56 ரக துப்பாக்கி யுகம் ஒன்று உருவாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மத்துகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் , நாட்டு மக்கள் பீதியுடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுவீடாக புகுந்தும், வீதிகளிலும் கொலைகள் இடம்பெறுகின்றன.
துப்பாக்கிகள் நாட்டை ஆளுகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தக் கூடிய திராணி தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை.
ஆனால் ஜே.வி.பி வெல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.
உங்களது நிதி எங்களுக்குத் தேவையில்லை.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மன்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி வென்று ஆட்சியமைக்கும்.
அதன்பின்னர் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான குழுக்களை நியமித்து, கிராம ரீதியாக பாதுகாப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

