News
நுவரெலியாவில் சொகுசு பஸ் விபத்து – பஸ்ஸில் பயணித்த 42 பேரும்காயம்
நுவரெலியாவில் இருந்தது திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாதவில் குறித்த பஸ்ஸில் பயணித்த 42 பேரும் காயமடைந்துள்ளனர்.
விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பஸ்ஸில் பயணித்த 42 பேரும் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்