கல் எளிய பெண்கள் மத்ரஸா – வக்ப் சபை வரலாற்றுத் தீர்ப்பு.

கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி இந்த நாட்டு முஸ்லிம்களின் வக்ப் சொத்து என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
குறித்த கல்லூரியினை சிலர் கையகப்படுத்தி இது தனியார் சொத்தும் என்றும் தனியார் பாடசாலை என்ற கோணத்திலும் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட நிலையில் அது தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் சார்பாக வக்ப் சபையில் வழக்குத் தொடரப்பட்டது.
சுமார் மூன்று வருட சட்டப் போராட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் வெற்றி காணப்பட்டுள்ளது.
அதன் படி கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி வக்ப் சொத்து என்று உறுதிப்படுத்தப்படுவதாகவும் எதிர்வரும் 04 வாரங்களுக்குள் கல்லூரியின் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் வக்ப் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வக்ப் சபை இன்று உத்தரவிட்டது.

