News
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரால் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை – புகாரை அடுத்து பொலிசாரால் கைது

14 வயதும் ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்றைய தினம் வீடொன்றுக்குள் நுழைந்து 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என லக்கல பொலிஸார் தெரிவித்த தகவலின்படி தெரிய வந்தது.

