இந்தியா தாக்குதல் நடத்திய இடங்களில் இரண்டு பள்ளிவாயல்களும் அடங்கும் ; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இந்தியா தாக்குதல் நடத்திய இடங்களில் இரண்டு பள்ளிவாயல்களும் அடங்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் குறிப்பிட்டார்.
பிபிசி யிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப்,
“தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுகிறேன்.
அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்று இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

