ஜனாதிபதி வியட்நாமில் இருந்து தனியார் விமானத்தில் வந்ததால் நாட்டுக்கு பாரிய நன்மை..- விஜித

வியட்நாமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் விழாவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் குழுவினர் இலங்கை வந்த தனி விமானம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தது.
ஜனாதிபதி இலங்கை வர அந்த தனியார் விமானத்தை வியட்நாம் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்ததாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத், அதார்காக ஒரு சதமேனும் செலவிடவில்லை எனவும் மூலம் நாட்டிற்கு மிகப் பெரிய நன்மை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வியட்நாம் செல்ல டிக்கட் கட்டணத்தை அரசு செலுத்தியதாகவும் அவர் கூறினார்.ஆனால் திரும்பி வர வியட்நாம் அரசாங்கம் செலவு செய்ததாக அரசாங்கம் முதலில் அறிவித்திருந்த நிலையில் தற்போது வேறு தரப்பினர் அதற்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது பிரச்சினைக்குரிய நிலைமை எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் திரு.ஹர்ஷன ராஜகருணா கேள்வி எழுப்பினார்.

