News
வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் போதைப்பொருளையும் (குடு) விநியோகம் செய்தனர்..

இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மிகவும் வலுவான பிரச்சார வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாக பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை விட இந்த தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் அதிக பலத்தை பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
பொருட்கள் தேவையிப்பட்டவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.சாரயம் குடிக்க விரும்புபவர்களுக்கு சாரயம் வழங்கப்பட்டது.போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு ‘குடு’ போதைப்பொருளும் வழங்க்கப்பட்டது.
மற்ற தொகுதிகளில் எவ்வாறு என தெரியாது குறிப்பாக கோட்டே தேர்தல் தொகுதியில் அவ்வாறு நடந்தது.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



