News
மற்ற கட்சிகளில் உள்ள முற்போக்கானவர்களை இணைத்துக்கொண்டு கொழும்பு மாநகர சபையில் நாமே ஆட்சியமைப்போம் !

கொழும்பு மாநகர சபையில் தாமே ஆட்சியமைப்போம் என பிரதி அமைச்சர் சுனில் வடகல குறிப்பிட்டார்.
தனிக் கட்சியாக நாமே பொரும்பான்மை பெற்றுள்ளதாக கூறிய அவர் ஆட்சியமைக்கு தமக்கு 11 ஆசனங்களே தேவை என கூறினார்.
விஷேடமாக ஐக்கிய மக்கள் சக்தியில்,ஐக்கிய தேசிய கட்சியில் மற்றும் இதர கட்சிகளில் முற்போக்கானவர்கள் உள்ளனர். அவர்களோடு சுயாதீன உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு நாம் ஆட்சியமைப்போம் என கூறினார்.
அனுர குமார திஸாநாயக 6 மாதங்களில் இந்த நாட்டை தூக்கிநிறுத்தியுள்ளாதைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்மோடு அவர்களாக முன்வந்து பேசி வருகிறார்கள் என குறிப்பிட்டார்.

