News
தமிழ் அரசு கட்சி மற்றும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுக்கும் ,பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிற்கும் இடையில் சந்திப்பொன்று (17) திருகோணமலையில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து செயற்படுவது தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகரான நௌபரும் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
—
Hasfar A Haleem BSW (Hons)

