News

OMF சத்திர சிகிச்சை நிபுணராக தேர்ச்சி பெற்ற Dr. ஷஸ்லி ஹமீட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனையை பூர்வீகமாகக் கொண்ட Dr. ஷஸ்லி ஹமீட் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற MD in OMF SURGERY பரீட்சையில் சித்தி பெற்று வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணராக தேர்ச்சி பெற்றுள்ளார் .

இத்துறையின் உள்ளடக்கங்களாவன :

• விபத்துக்களால் முகத்தில் ஏற்படும் உடைவுகளை சரி செய்தல்.
• உதட்டுப் பிளவு, அண்ணப்பிளவு போன்ற பிறப்பிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை சரி செய்தல்.
• ஒழுங்கற்ற தாடை அமைப்புகளால் (சிறிய தாடை , பெரிய தாடை) முகத்தில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை சரி செய்தல்.
• முகம், வாய் என்பவற்றில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தல்.
• மூக்கு, காது, கண் என்பனவற்றின் உருவம் மற்றும் அளவு என்பனவற்றில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
• உதடு, கன்னம், நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், பற்கள் என்பவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளல்.
• முகத்தில் ஏற்படும் அழகு சார் குறைபாடுகளை சரிப்படுத்துதல் (Facial Plastic Surgeries)
இத்துறையில் மிகச் சிலரே பாண்டித்தியம் பெற்றுள்ள நிலையில்
Dr. ஷஸ்லி ஹமீட் அவர்கள் இத்துறையில் நிபுணராக தேர்ச்சி பெற்றுள்ளமை மிகப்பெரியதொரு வரப்பிரசாதமே. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு இத்துறையில் நீண்ட காலமாக நிலவி வந்ததொரு வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தியாகும்.

இவரின் சாதனைகளும் சேவைகளும் தொடர எமது வாழ்த்துக்கள்.

Dr. ஷஸ்லி ஹமீட் (MD in OMF SURGERY (MD in OMF SURGERY)

(பேராதனை வைத்தியசாலை)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button