News
ஜனாதிபதி தேர்தலில் போடியிட ஒவ்வொரு மேலதிக வேட்பாளருக்கும் 200 மில்லியன் மேலதிக செலவு ; தேர்தல்கள் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது .
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் அதிகரித்தால் 200 மில்லியன் மேலதிக செலவு ஏற்படும் என அந்த திணைகளம் மதிப்பிட்டுள்ளது.
இம்முறை தேர்தலுக்கு 1000 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அதிகரித்தால் செலவீனம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டது.