ரயில் வே பாதையில் வாழந்த 116 குடும்பங்களுக்கு புதிய தொடர்மாடி வீடுகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் கையளிப்பு

(அஷ்ரப் ஏ சமத்)
களனி ரயில்வே வீதியை அகலமாக்கி இரட்டை தண்டவாள ஓடு பாதையாக்கும் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
களனி ரயில்வே வீதிக்கருகில் சட்டவிரோதமாக குடி வாழ்ந்த 116 குடும்பங்களது வீடுகளை அகற்ற வேண்டியுள்ளதால் அம் மக்களுக்கு 116 குடும்பங்களுக்கு கொட்டாவையில் நிர்மாணிக்கப்பட்ட ” பேர்ல் சிட்டி எனும் புதிய தொடர்மாடிகள் கடந்த வெள்ளிக்கிழமை 07.06.2025 கையளிக்கப்பட்டது. .
இவ் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் வீதி அபிவிருத்தி சிவில் போக்குவரத்து. துறைமுகங்கள், அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் தொடர்மாடி திறந்து வைக்க்பபட்டு வீட்டுரிமை பத்தரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் வீடுகளுக்கான வீட்டுரிமைப் பத்தரிங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
.ஒரு தொடர்மாடி வீட்டின் பெருமதி மில்லியன் 182. மில்லியன் ருபாவாகும்.
இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரயில்வே திணைக்களத்தினால் நிதிவசதிகள் நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் தேவநாந்த சுரவீர, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அரவிந்த சிறிநாத், பொதுமுகாமையாளர் பொறியிலாளர் கே.ஏ ஜானக்க, கொழும்பு ரயில்வே பாதை அபிவிருத்தி பணிப்பாளர் உபாலி மல்லிஆராச்சி பிரதேச அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

