News
வரலாற்று சாதனையை நிகழ்த்தி டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது தென் ஆப்ரிக்கா 💐 வாழ்த்துக்கள்

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகி உள்ளது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை நேற்று தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில் இன்றைய தினம் 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி சற்றுமுன் 5 விக்கட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

