இலங்கையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்.
(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தானின் 78வது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள உயர்ஸ்தாணிகர் ஆலயத்தில் உயர்ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் யுல் அசீஸ் தலைமையில் இன்று 14.08.2024 நடைபெற்றது. இந் நிகழ்வின்போது பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் ஆலயத்தின் ஊழியர்களும் . இலங்கை வாழ் பாக்கிஸ்தானியர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் உயர்ஸ்தாணிகர் சுதந்திர தின கேக்யும் வெட்டி குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி, மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்களது சுதந்திர தின செய்திகளும் உயர்ஸ்தாணிகர் அலுயத்தின் செயலாளரினால் வாசிக்கப்பட்டது.
பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகரின் உரையில் இலங்கை பாக்கிஸ்தான் நட்புரவுகள் மற்றும் பொருளாதார, பௌத்த,கலாச்சார மற்றும் பாதுகாப்பு கல்வி,சுகாதார விடயங்களில் பாக்கிஸ்தான் இாலஙகை கடந்த 77 வருட காலமைக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கியவைகள் பற்றியும் உயர்ஸ்தாணிகர் அங்கு உரை நிகழ்த்தினார்