News
அயோத்தி இராமர் ஆலயத்திற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான சுமார் 4000 விளக்குகள் திருட்டு
உத்தரபிரதேசம் அயோத்தி இராமர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான விளக்குகள் திருடப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு செல்லும் வழியில் 6,400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கணக்கெடுக்கப்பட்ட போது 3,800 வண்ண விளக்குகளும் 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருடப்பட்ட வண்ண விளக்குகளின் பெறுமதி சுமார் 50 இலட்ச ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது