News
ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்டவர்கள் கைது.
தமது ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (14) பிற்பகல் கைது செய்துள்ளது.
அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அக்கட்சியின் செயலாளர் உள்ளிட்ட official சிலரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் பொரளையில் வைத்து 3 கோடி இலஞ்சம் பெறும்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்னர்.