VIDEO > பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது.

இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி.
இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது.
This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war.
It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups.
The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman.



