நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் கேஸ் தட்டுப்பாட்டை எப்படி நிவர்த்தி செய்வது என அரசுக்கு விளக்கம் வழங்கினார் நாமல் ராஜபக்ஷ

நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியுள்ள சமையல் கேஸ் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தட்டுப்பாடு ஏற்கனவே பல பிராந்தியங்களை பாதித்துள்ளதோடு, குடும்பங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக ராஜபக்ச தெரிவித்தார்.
விநியோகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக, ஹம்பாந்தோட்டை துறைமுக பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள முனையத்திலிருந்து L P எரிவாயுவை அவசரமாக விடுவிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
முந்தைய நிர்வாகங்களின் தாமதங்கள் மற்றும் முடிவெடுக்க முடியாத தன்மை ஆகியவை முன்னைய நெருக்கடிகளுக்கு பங்களித்ததாகக் கூறிய அவர், மேலதிக இடையூறுகள் மற்றும் பொதுமக்களின் அசௌகரியங்களைத் தவிர்க்க சரியான நேரத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை எரிவாயு முனையம் முதன்மையாக மறு ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போதைய சூழ்நிலையில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் வரை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை விடுவிக்கும் வகையில் கொள்கை திருத்தப்பட வேண்டும் என நாமல் தெரிவித்தார்.



