இனவாதம் அற்ற தலைமை, பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய தலைவர் ரனில் விக்ரமசிங்க
பொதுபல சேனா அமைப்பு கூர்மை பெறவும் முஸ்லிம்களுக்கு எதிரான எதிரான இனவாதம் மேலோங்கவும் பாடலி சம்பிக ரனவகவே அடிப்படை காரணம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் குறிப்பிட்டார்.
இம்முறை அல்ல கடந்தமுறையும் பாடலி சம்பிக இருந்த பக்கத்தில் தான் அவர்களும் இருந்தார்கள்.கடந்த காலங்களில் தென் பகுதிகளில் மொட்டுக்கு அதிக ஆதரவு இருந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்களது தென்பகுதி கூட்டங்களுக்கு கூட முஸ்லிம் தலைவர்களை அழைத்து செல்லவில்லை.
தேர்தலுக்கு பின்னரும் சிங்கள வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தவிர்ந்த வந்தார்கள்.ரிசாத் பதியுத்தீன் அகப்பட்ட சந்தர்பத்தில் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் தவிர்ந்தே வந்தார்கள். சிங்கள வாக்குகளை பெறுவதற்காக. பாராளுமன்றில் நாம் சாட்சி. உண்மையின் பக்கம் நிற்க முடியாதவர்கள் உரிமையை தீர்த்துக்கொள்வார்கள் என நினைத்துக்கொள்ள முடியாது.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அவர்கள் எடுத்த முடிவு எவ்வளவு பிழையான முடிவு என்பதை அவர்கள் தேர்தலின் இறுதிக்காலத்தில் தெரிந்துகொள்ளவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இனவாதம் அற்ற தலைமை, பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய தலைவர் ரனில் விக்ரமசிங்க என அனைவரும் சொல்வர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.