News
கண்டி அஸ்கிரிய பீட அனுநாயக தேரரின் மறைவுக்கு அனுதாபம்

கண்டி நகர மஸ்ஜித் சம்மேளனம், கண்டி நகர ஜம்மியதுல் உலமா, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து, கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக தேரர் சங்கைக்குறிய ஆணமடுவே தம்மதஸ்ஸி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக கண்டி நகர முஸ்லிங்களின் குழு ஒன்று 23.07.2025 புதன் கிழமை இரவு 7 மணிக்கு அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்து
தமது ஆழ்ந்த இரங்கலையும் சோகத்தையும் மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் இரங்கல் செய்தியையும் அஸ்கிரிய பீடத்தின் உயர் பீடாதிபதி உட்பட அணைவருக்கும் தெரிவித்துக் கொண்டது.
இந்நிகழ்வில் சம்மேளன உறுப்பினர்கள், உலமா சபை அங்கத்தவர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தகவல்
K.R.A. சித்திக்
தலைவர்
கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேலணம்

